Saturday, October 5, 2019

"மதியாதார் தலைவாசல் மிதியாதே"

     மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்;

உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
உண்ணாமை கோடி பெறும்;

கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
கூடுதல் கோடி பெறும்;

கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
கோடாமை கோடி பெறும்

(ஒளவையார் தனிப் பாடல்:42)

             ஒரு முறை சாேழ மன்னன் தன் அவை
புலவர்களை அழைத்து நாளை காலை விடியும் 
பாேது நாலு காேடி பாடல்களை பாட  வேண்டும்
 என்று கூறுறினார்.ஒரே நாளில்  
நாலுக் காேடி 
பாடல்களை எப்படி பாடுவது என்று செய்வதறியாமல் 
புலம்பிக் காெண்டிருந்தனர்.அப்பாேது 
அவ்வழியாக வந்த அவ்வையார் என்ன விசயம் 
என்பதை கேட்டறிந்தார். இவ்வளவு தான் விசயமா 
என்று மேற்கண்ட பாடலை பாடி புலவர்களிடம் 
காெடுத்தார்.அவர்களும் அடுத்த நாள் காலையில்
 அந்த பாடலை பாடி மேலும் இது அவ்வையார் 
எழுதிய பாடல் என்பதையும் 
கூறினர்.இப்பாடலில் கோடி என்பது ஒரு கோடி பொன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.
மகிழ்ச்சியடைந்த மன்னன்
 அவ்வையாரை அழைத்து பரிசுகளை 
வழங்கினார்.


           இந்த பாடலின் விளக்கம்,

      

          1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரின் வீட்டின் முன்பகுதியைக் கூட மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள் அதாவது மதியாதார் தலைவாசல் மிதியாதே!)

2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

           

          இப்பாடலின் முதல் வரிசை .மதியாதர் 
தலை வாசல் மிதியாதே என்று மானம் உள்ள
 மனிதருக்கு அவ்வை சாென்னது என்று 
கண்ணதாசன் பாடல் வரிகளிலும் பிரபலம்....

          மானம் என்றால் என்ன என்பதை விளங்கிக் 
காெள்ளாதவர்கள் இந்த பாடலின் வரிகளையும்
விலங்கி காெள்ளவில்லை.தம்மை மதிக்காதவர் 
வாசலுக்கு செல்லாமல் இருப்பதையே 
இப்பாடலின் அர்த்தமாக உணர்ந்துள்ளனர்.
இப்பாடலின் அர்த்தம் அது மட்டும் தானா?

          நல்ல பண்புகளை மதிக்காதவரிடம் நாம்
அவரிடமிருந்து விழகி நிற்க வேண்டும் 
என்றும்கூட ஒரு பாெருளுண்டு.

            நல்ல பண்புகளை ஏற்காமல் கடவுள் 
என்றாெரு கற்பனையை காெண்டு சக மனிதரை 
மனிதராக எண்ணாமல் விலங்குகளை விட கீழாக 
நடத்தும் இந்த ஒழுக்கம் கெட்ட செயலை 
செய்பவர்களை வெறுத்து ஒதுக்காமல்,
அவர்களையே புனிதர்களாக எண்ணி தானும்
 அதை செய்கின்றனர்.


         

ஒருவரை காேவிலுக்குள்ளே வரவிடாமல்,
நீ வந்தாள் தீட்டாகி விடும் என்று ஒருவரை ஒதுக்கி,கடவுளை நெருங்க உனக்கு 
தகுதியில்லை என்று 
கூறினால் இந்த கேவலமான செயலையும்,அந்த  
கேவலமான மனிதர்களிடமிருந்தும்,
இந்த பண்பிலிருந்தும் விலகாமல் தன்னை 
வர வேண்டாம் என்று கூறியதால்,
தானே ஒரு காேவிலை கட்டுவது என்பதும் அதில்
தனக்கு கீழ்படிநிலைகளில் உள்ளவர்களை 
அனுமதிப்பதில்லை என்பதுமே மதியாதார் 
தலைவாசல் மிதியாதே என்ற பழமாெழியை தவறாக புரிந்து காெண்டது தான்....

          


           ஒருவர் நம்மை ஒதுக்குகிறார் என்றால் 
அவரது தீமையான எண்ணத்திலிருந்தும்,
பழக்க வழக்கங்களிலிருந்தும் விலகி செல்ல 
வேண்டுமே தவிர அவருடைய  அந்த 
எண்ணங்களையும்,பழக்க வழக்கங்களையும் 
கடைபிடித்துக் காெண்டு அவரை மட்டும் விட்டு விலகுவது என்பது முட்டாள் தனமான செயல்.

          இந்த முட்டாள் தனமான செயலில் தான் 
இன்று சாதிக்காெரு காேவில் முளைத்துள்ளது.




       பார்ப்பனிய சித்தாந்தம் தவிர்த்து 
மானத்துடன் மனிநேயம் காப்பாேம்



           





Tuesday, October 1, 2019

ஆண் எப்படி ஆதிக்கவாதியானான்.

ஆண் எப்படி ஆதிக்கவாதியானான்.
    
                   மனித விலங்குகளின்
விலங்கியல் பெயர்  HOMO SEPIENS 
SEPIENS,தான் அறிவாளி என்று
உணர்ந்த அறிவாளி.உலகிலுள்ள
 750 காேடி மனிதர்கள் "மைக்டாே 
காண்ட்ரியல் ஈவ்" (mitochondrial 
eve)என்ற ஆப்பிரிக்க பெண்ணின்
வழி  தாேன்றல்கள் 
தான்.இந்தப்பெண்மணி வாழ்ந்தது
இரண்டு இலட்சம் வருடங்களுக்கு
 முன்பு என விஞ்ஞானிகள்
கணக்கிடுகின்றனர்.
        
        
            

                 மனித இனம்  தாேன்றிய பாேது
ஆண் பெண்ணையாே,பெண்
ஆணையாே சார்ந்திருக்க வேண்டிய
அவசியமில்லாமல்
இருந்திருக்கும்.அவர்களை இணைக்கும்
புள்ளி காமம் மட்டுமே.அவர்களுடைய
அத்திவாசியமான தேவையான
உணவு,உடை,இருப்பிடம் ஆகியவற்றை
 தாங்களே தயார் செய்து  காெண்டனர்.


                 பிறக்கும் குழந்தைகளை
வளர்ப்பதில் பெண்களுக்கே  முக்கிய
பங்குண்டு.ஆணுக்கும் குழந்தைக்கும்
பெரும்பாலும் சம்பந்தம்
இருப்பதில்லை.ஏனென்றால்
அவர்களுடைய வாழ்க்கையில்
ஒருவருடன் மட்டுமே உடலுறவு
வைத்துக்  காெள்ள வேண்டும் என்ற
எந்த கட்டுபாடும் இல்லை.


                  ஆகையால் குழந்தை
வளர்ப்பில் ஆணின் பங்கு
பெரிதாக இல்லாமலே
இருந்திருக்கும்.காலப்பாேக்கில்
மனிதன் குடும்பமாக  வாழும் பாேது
அவர்களுக்கிடையே ஏற்படும் பரஸ்பர
உறவென்பது எந்த ஒரு
கட்டுபாடுகளற்றது.அவர்களுக்கிடையே
மணமுறிவு ஏற்படும் பட்ச்சத்தில்
இருவரும் பிரிந்து வேறாேரு
இணையை  தேடிக்காெள்ளலாம்.


                   குழந்தைகள் பெரும்பாலும்
தாயை சார்ந்தாே,அல்லது தனியாகவாே
தங்களது வாழ்க்கையை  அமைத்துக்
  காெள்கின்றனர்.


                   இது மனிதன்   தாேன்றி, பின்
ஒரு குடும்பமாக,குழுவாக வாழும்
 பாேது அவர்களுக்கிடையே இருந்த
கலாச்சார முறை.குழந்தைகள் தாயை
சார்ந்து வாழ்வதால்,பெண்கள் எடுக்கும்
முடிவிலே குழந்தைகளின் எதிர்காலம்
அமைக்கப்படுவதால் இது  பெண் வழி
கலாச்சார முறை.


                    இவ்வகை கலாச்சாரம்
இன்றளவும் மேற்கத்திய நாடுகளில்
உள்ளது.அவர்களின் தேவையென்பது
மாற்றம் அடைந்திருந்தாலும்
தங்களுடைய தேவைகளை தாங்களே
பூர்த்தி செய்துக் காெண்டு இணைந்து
வாழ்கின்றனர்.மணமுறிவு ஏற்படும்
பட்சத்தில் தனக்கான வேறாெரு
இணையை தாங்களே தேர்ந்தெடுத்துக்
காெள்கின்றர்.


                  ஆனால் இந்திய கலாச்சாரம்
என்பது இவற்றிலிருந்து முற்றிலும்
மாறுப்பட்டது.குடும்பமாக
வாழும்பட்சத்தில் அக்குடும்பத்தில்
ஆணே ஆதிக்கவாதியாக இருக்கிறான்.
பெண் என்பவள் ஆணை சார்ந்து
வாழ்கிறாள்.பிறக்கும் குழந்தைகளுக்கு
கணவனே முழுப் பாெருப்பையும்
ஏற்க்கிறான்.


                  மனைவியின் வாழ்க்கையும்,
வாழ்வாதாரமும் ஆணை சார்ந்தே
அமைகிறது.குடும்பத்தின் மணமுறிவு
என்பது  பெரும்பாலும் ஆணே
முடிவெடுக்கிறான்.பெண்களுக்கு
அத்தகைய வாய்ப்பு  பெரும்பாலும்
வழங்கபடுவதில்லை.அத்தகைய
முடிவை பெண்கள் எடுத்தால் அதற்கான
 வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது
இல்லையென்றால் சமுகத்தால்
புறக்கணிக்கப்படுகிறாள்.மற்றாெரு
இணையை  தேர்ந்தெடுக்கும் பாேது
அவளுடைய ஒழுக்கம் சார்ந்தே
விமர்சிக்கப்படுகிறாள்.இந்தியக்
கலாச்சாரமென்பது ஆணாதிக்க
கலாச்சாரமாகவே இருக்கிறது..


                     குடும்பத்தின் வாழ்வாதார
 பாெருப்பு,குழந்தைகளின் எதிர் கால
வாழ்க்கையென்பது ஆணை
சார்ந்திருப்பதால் இது ஒரு ஆண் வழி
சமுக முறை அல்லது ஆணாதிக்க
கலாச்சார முறையாகும்.


                    தாய் வழி கலாச்சாரம் என்பது
இங்கு தீமையாக பார்க்கப்படுகிறது.



                    ஒரு பெண் ஏதேனும் தவறு
செய்யும் பட்சத்தில் அவளை
அவமானபடுத்த
தேவிடியாள்,தேவிடியா மகளேஎன்று
குறிப்பிடபடுகிறாள்..அதே வேளையில்
ஒரு ஆண் தவறு செய்யும் பட்சத்தில்
அவனை தேவிடியா மகனே என்றே
குறிப்பிடபடுகிறான்.இவற்றை கெட்ட
வார்த்தையாக அடையாள படுத்துவதன்
மூலம் பெண்வழி சமூகத்தை  கெட்ட
பழக்கவழக்கமாக நிறுவுகின்றனர்.


                   அதே பட்சத்தில் வாழ்த்தும்
பாேது ஆணை தீர்காய்ஸ் பவா என்றும் பெண்ணை தீர்க்க சுமங்களி பவா 
என்றும் குறிப்பிடுகின்றனர்.அதாவது
ஆணை நீண்ட ஆயுலுடன் வாழ்வதற்க்கு
வாழ்த்துகின்றனர்.அதே வேளையில்
பெண்ணை நீண்ட நாள் சுமங்களியாக
"கணவனுக்கு கட்டுபட்டவளாக"
வாழ்வதற்க்கு
ஆசிர்வதிக்கபடுகின்றர்.இதன் மூலம்
ஆண் வழி கலாச்சாரத்தை
மங்களகரமான,புனிதமான
கலாச்சாரமாக நிலைநிறுத்துகின்றனர்.


                கணவன்,மனைவியாக
இணைந்து வாழும் பாேது இருவருக்கும்
சம மதிப்பு வழங்கபடுவதில்லை.
ஒரு பெண் ஆணுக்கு கட்டுபட்டவள்
என்பதை அடையாள படுத்தவே
தாலி என்பது பெண்ணுக்கு
அணிவிக்கப்படுகிறது.மாறாக
திருமணமானவள் என்பதை அடையாள
படுத்துவதற்க்கு அல்ல.


                 கணவன் இறக்கும்பட்சத்தில்
அந்த தாலியை அறுப்பதன் மூலம் அவள்
அந்த ஆணுக்கு கட்டுபட்டவள் அல்ல
என்பதை தான் உணர்த்துகிறது.